திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி கருத்து!

திரையுலகில் பாலியல் தொல்லை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி கருத்து தெரிவித்து உள்ளார்.
செப்டம்பர் 13, 2017, 11:20 AM
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்தாலும் ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தனது சிற்ப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராகவலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது டாடி என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்கள் சினிமா வாழ்க்கையில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும், இன்னல்களை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா, சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள் எனவும், அதனை அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள் எனவும், நடிகையாக ஜெயிக்க வைப்பதற்காக இப்படி பெண்களை வற்புறுத்துவது மிக கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்