இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சிறுவர்கள்

இலங்கையில் 10 தொடக்கம் 17 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் 19 சதவீதமானோர், இணையத்தளத்தில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், இணையத்தளத்தில் இருந்து பாதுகாப்பு தொடர்பான, மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் அதிகாரிகளுக்கு, தெளிவூட்டும் நிகழ்வு காலி- மாலாவே பிரதேசத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு அதிகாரசபையின், பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பி கே.அயகம குறிப்பிடுகையில் 10 தொடக்கம் 17 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் 19 சதவீதமானோரே இணையத்தளத்தில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் குருநகல், கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நீர்கொழும்பு, ஆகிய பிரதேசங்களில், இணையத்தள   துஷ்பிரயோகங்கள் அதிகளவில் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்