ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை வருகின்றார்?

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு ஆகியன மீள நிகழாமையை உறுப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி.கிரெய்ப் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 36 ஆவது கூட்டத் தொடரிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

மேலும், தமக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை அங்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவது இவரது கடப்பாடாகும்.

இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஸ்ரீலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்