நள்ளிரவில் கோவிலின் முன்பாக அம்மன் சிலை!

அம்பாறை-நாவிதன்வெளி மாரியம்மன் கோவிலின் முன்பாக கைவிடப்பட்ட நிலையில் 2 அடி உயரமான ஜம்பொன்னிலான அம்மன் சிலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி அளவில் மேற்படி சிலையை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த கோவிலுக்கு சென்று சிலையை மீட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தின் அம்மன் சிலை கடந்த 2009 ம் ஆண்டு திருட்டு போயுள்ளதாக ஆலயத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சிலை திருட்டுப்போன சிலை எனவும் அது உருவம் மாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகித்துள்ளனர்.

எனவே குறித்த சிலையை பகுப்பாய்வு செய்வதற்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வேறு ஆலயங்களில் சிலை திருட்டுப் போனவர்கள் மீட்கப்பட்ட சிலையை அடையாளம் காண தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் சவளக்கடை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்