ஷங்கர் இயக்கத்தில் அஜித்?

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘விவேகம்’. விமர்சன ரீதியில் இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. மேலும், கையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒய்வெடுத்து வருகிறார் அஜித்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. தற்போது ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

ஷங்கர் – அஜித் கூட்டணியை உருவாக்கியது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான். இருவருக்குமே நண்பர் என்பதால் இக்கூட்டணியை முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது.

மேலும், அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கவிருப்பதாகவும், இதற்கான கதை விவாதம் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். ஆகவே, அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது அவருடைய ஓய்வுக்குப் பிறகு முடிவாகும் எனத் தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்