எட்டு மாதங்களில் 6,165 சிறுவர் உரிமை மீறல் முறைப்பாடுகள்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் நாடெங்கும் சிறுவர் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 6 ஆயிரத்து 165 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 90 வீதமானவை அதிகாரசபையின் 1929 தொலைபேசி மூலமாக கிடைத்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்களை இம்சைப்படுத்தல், தொழில்களில் அமர்த்துதல், யாசகத் தொழிலில் ஈடுபடுத்தல், அவர்களை அநாதாரவாக விட்டுச்செல்லல், பாடசாலைக்கு அனுப்பாமை, துஷ்பிரயோகம் செய்தல், கடத்தல் போன்றவை சிறுவர் உரிமை மீறல்களாக கணிக்கப்படுமெனவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்