மரக்கிளைக்கு அடியில் சிக்கி தவித்த உயிர்!

மரக்கிளைக்கு அடியில் சிக்கி தவித்த உயிர்!

எகிரியன்குபுர-மீரெகன கிராமத்தில் காற்றின் போது மரக் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொனராகல-தெனகல்லன்தே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய எம்.ரத்னபால என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு தனது தாயின் வீட்டிற்கு சென்று வந்துக் கொண்டிருந்த வேளை பலத்த காற்றினால் மரத்தின் கிளை முறிந்து அவரின் மேல் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தின் கிளையில் சிக்கி தவித்த மேற்படி நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்