காதலை நிராகரித்ததால் பள்ளி மாணவியை கொலை செய்த காதலன்

ஐதராபாத்தில் காதலை நிராகரித்ததால் பள்ளி மாணவியை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 13, 2017, 03:04 PM
ஐதராபாத்,

ஐதராபாத் அருகில் உள்ள மியாபூர் குடியிருப்பில் வசிக்கும் சாந்தினி ஜெயின் (வயது 17) இவர் அருகில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நண்பர்கள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சாந்தினி ஜெயின் வீட்டில் இருந்து புறப்பட்டு காதலன் சாய் கிரனுடன் சென்றுள்ளார். நண்பர்கள் வீட்டிற்கு சென்ற மகள் வெகுநேரம் ஆகியும் வராததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மியாபூர் காவல் நிலையில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். தொடர்ந்து மாணவியை போலீசார் தேடிவந்தனர்.

இந்தநிலையில் அமீன்பூர் அருகே உள்ள மடினகுடாவில் அருகே உடல் சிதைந்த நிலையில் பெண் சடலம் இருப்பதை அந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் இது குறித்து மியாபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் சாந்தினி ஜெயின் உடல் தான் என போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அங்கு இருந்த சிசிடிவி கேமரா மூலம் மாணவர் ஒருவர் மாணவியை ஆட்டோவில் இருந்து அழைத்து மலை பகுதிக்கு அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக விசாரித்த போலீசார் சாய் கிரன் தான் மாணவியை அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சாய் கிரனுடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். சாந்தினி ஜெயினும் நானும் 6-ம் வகுப்பு முதல் 10- வகுப்பு வரை ஒன்றாக படித்து வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக சாந்தினியை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அவள் என்னை தொடர்ந்து நிராகரித்து வந்தாள். கடந்த சனிக்கிழமை சாந்தினியை மடினகுடாவிற்கு அழைத்து சென்று மீண்டும் தன்னை காதலிக்கும் படி வலியுறுத்தினேன். அப்போது எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த கட்டையை எடுத்து அவரை தாக்கினேன். சரிந்து விழுந்த அவளை மலையில் இருந்து கிழே தள்ளி வீசி கொன்றேன்.

இவ்வாறு சாய் கிரன் போலீசாரிடம் கூறினார். மாணவியை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் சாய் கிரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்