சுற்றிவளைக்கப்பட்ட Tamilrockers Admin… திட்டமிட்ட விஷால்.. நிகழ்த்திய போலீசார்

தமிழ் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மினை சென்னையில் உள்ள திருவல்லிக்கேனி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். திருப்பூரை சேர்ந்த கௌரி சங்கர் என்பவரை பல நாட்களாக கண்காணித்து வந்த திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் அமைத்திருந்த ரகசிய குழு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சுற்றிவளைக்கப்பட்ட Tamilrockers Admin... திட்டமிட்ட விஷால்.. நிகழ்த்திய போலீசார்

இந்நிலையில் இன்று திருப்பூரில் இருந்து சென்னை வந்த கௌரி சங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கௌரி சங்கரை விசாரணைக்காக சென்னை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல வருடங்களாக தமிழ் திரைப்படத்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கைது செய்துள்ளது தயாரிப்பாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கௌரி சங்கரை கைது செய்ததில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் பங்கு கூடுதல் என்கிறார்கள். மேலும் இது தொடர்பாக பல மாதங்களாகவே தனது நண்பர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விஷால் ரசியமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்