வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது

கரபியன் பிராந்தியத்தில் சூறாவளி இர்மா வரப்போகிறது என்ற காரணத்தால் , கரபியன் விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ளன . விமானங்கள் வந்திறங்கும் முக்கிய மையமான போர்டோரிகோ விமான இறங்கு தளம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது .

நேற்று செவ்வாயன்று பிரிட்டனிலிருந்து இங்கு வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது . அதேபோல பிரிட்டிஷ் எயர்வேஸ் விமானமொன்று அன்டிகுவாவுக்கு வரவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளது . அத்துடன் பயணிகள் அற்ற ஒரு விமானத்தை  அனுப்பி,  நேரத்தோடு அங்குள்ளவர்களை  அன்டிகுவாவிலிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கின்றது .

அதேபோல வேஜின் என்ற பிரிட்டிஷ் விமான நிறுவனமும் தனது பயண நேரங்களை மாற்றி ,  கரபியன் தீவில் உள்ளவர்களை பத்திரமாக அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளமை , இங்கே குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்