கணிதப் பாடத் திட்டத்தை அமைப்பது பெரிய சவால்

ஒண்டாரியோ  மாவட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்கள் , கணிதத்தில் தரமாக இல்லை என்று கண்டறிந்த பின்னர் , பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஒண்டாரியோ கல்வி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது .

சமீபத்தில்  மாணவர்களின் தரம் கண்டறிய ஒரு  சோதனைப் பரீட்சை நடாத்திய பின்னரே , இந்த முடிவுக்கு நிர்வாகம் வந்துள்ளது .. நேற்று புதனன்று இதை கல்வி அதிகாரி காதலின் வைன் அறிவித்துள்ளதோடு , பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பொதுமக்களின் ஆலோசனைகள் கோரப்படும் என்று தெரிவித்துள்ளார் .”கணிதப் பாடத் திட்டத்தை அமைப்பது எமக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கப்போகின்றது . எம்மிடம் போதுமான அளவு ஆசிரியர்கள் இருந்தாலும் , இதற்காக நிறையப் பணம் செலவிட்டு இருந்தாலும் , நாம் எதிர்ப்பார்க்கும் முடிவுகள் வரவில்லை எனபது எமக்குத் தெரிகிறது” என்று இவர் கூறி இருக்கிறார் .

திறமை  காணும் பரீட்சைகளில்,  ஆண்டு  6இல் உள்ள மாணவர்களில் பாதித் தொகையினர் ,  , சென்ற வருட முடிவுகளில் மாற்றம் ஏதுமின்றி , பிராந்திய தரத்தை எட்டி உள்ளார்கள் .ஆண்டு 3மாணவர்களில் 62 வீதமானவர்கள்  பிராந்திய தரத்தை எட்டியுள்ளார்கள் . இது சென்ற வருடத்தோடு ஒப்பிடும்போது, ஒரு வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது என்று இவர் கூறி இருக்கின்றார் .

கல்வி அமைச்சர் ஹன்டர் கடந்த செவ்வாயன்று விடுத்த அறிவித்தலில் , ஒண்டாரியோ அடுத்த மூன்று வருடங்களுக்கு 49 மில்லியன் தொகை செலவிட்டு , மாணவர்களுக்கு மனோரீதியாகவும் , உடல்ரீதியாகவும் உதவும் வகையில் , புதிய திட்டங்களை வகுத்து விரிவுபடுத்துமென கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்