வீடுகளில் மர்ஜுவானா வளர்ப்பதைப் பற்றி அரசு மீளாய்வு செய்ய வேண்டும்

அடுத்த கோடைகாலம் வரும்போது , சட்டரீதியாக மர்ஜுவானா விற்பதற்குரிய சட்டங்களை அமுல்படுத்த எமக்கு கால அவகாசம் போதாது .

எனவே சட்டரீதியாக மர்ஜுவானா விற்பதை ஜூலை 2018க்கு பின்போடுங்கள் என்று கனடியன் அரசைப் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர் . வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பொலிஸ் படையினர் , நேரில் அரசுடன் இதுவிடயமாக கலந்தாலோசிக்க உள்ளார்கள் . ஒண்டாரியோ பொலிஸ் உட்பட பல மாவட்டப் பொலிசார் , “வீடுகளில் மர்ஜுவானா வளர்ப்பதைப் பற்றி அரசு மீளாய்வு செய்ய வேண்டும் . காரணம் வீடுகளில் வளர்க்கப்பட்டால் , இளவயதினரும் மிகச் சுலபமாக இதைப் பெறக்கூடியதாக இருக்கும்”  என்று கருதுகிறார்கள்.

“பொலிசாருக்கு நிறையப் பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது . கூடுதல் நேரமும் பணமும் தேவைப்படுகின்றது . இதைப் பின்போடாவிட்டல் , குறுகிய காலத்தில் குற்றச் செயல்கள் நன்றாகவே அதிகரித்துவிடும்”  என்று  பொலிசார் கூறுகிறார்கள். கனடிய அரசு சமீபத்தில் விடுத்த அறிக்கை ஒன்றில் , வீடுகளில் நான்கு வரை  மர்ஜுவானா செடிகளை வளர்க்கலாம் என்றும் ,  ஒருவர் கைவசம் சட்டரீதியாக 30 கிராம் மர்ஜுவானா வைத்திருக்கலாம் என்றும் , அரசு அனுமதிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில்  ஜூலை 2018 முதல்  எவரும் இவற்றை வாங்கமுடியும் என்றும் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்