சமந்தா-நாக சைதன்யா திருமணத்திற்கு வெறும் 175 பேர்க்கு தான் அழைப்பு..! காரணம்..?

நடிகர் நாக சைதன்யா மற்றும் தமிழ் நடிகை சமந்தா இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்திற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இவர்களது கல்யாணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நான்கு நாட்கள் கோவாவில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் 6ம் தேதி இந்து முறைப்படியும், அக்டோபர் 7ம் தேதி கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின் ஐதராபாத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளது. திருமண சடங்குகள் இந்து, கிறித்துவ முறைப்படி நடக்க உள்ளதால், அதில் உறவினர்கள் அனைவரும் பங்கு பெறும் விதத்தில்தான் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்