வீதியில் நண்பருடன் ஆங்கிலம் பேசிய இளைஞர்.! மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்.!

டெல்லியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலுக்கு வெளியே 22 வயது இளைஞர் ஒருவர் தன் நண்பருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடி கொண்டிருந்தார்.
இந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞரின் பெயர் வருண் கலாதி. இவர் தனது நண்பரை ஓட்டலில் விட்டுட்டு செல்ல வந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறாய் என கூறி வருணை தாக்கினர்.

தாக்குதல் நடத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்