30 லட்சம் ரூபா செலவில் சன சமூக நிலையம் திறந்து வைப்பு

30 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சன சமூக நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் திறந்து வைப்பு

(க.கிஷாந்தன்)

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சனசமூக நிலையம் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் ககாங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 12.09.2047 அன்று மாலை நான்கு மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது ஆலய நிர்மாண பணிக்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான சீமெந்து பக்கட்டுக்கள், மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியன இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜாதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சனசமூக நிலையத்தின் மூலம் இங்கு வாழும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைய உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்