கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் – 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், 13.09.2017 அன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் மொத்தமாக பதினொறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் 5,6,7,8,9,10 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் என தெரியவந்துள்ளது.

கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்