போலீஸ்காரரை அடித்து உதைத்த பெண் நீதிபதி.

உத்திரகாண்ட் மாநிலத்தில் தன்னை பெண் நீதிபதி எனக் கொண்ட பெண் ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


டேராடூனில் உள்ள தனியார் பல்கலை., மாணவர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார், பெற்றோர்களை அழைத்து வரும்படி கூறி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டேராடூன் பல்கலை.,யில் படிக்கும் மகனுக்கு பேசுவதற்காக ஜெயா பதக் என்ற பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். தன்னை உ..பி.,யில் மாவட்ட கூடுதல் நீதிபதி என கூறிக் கொண்ட அப்பெண், போசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த நரேஷ் ரத்தோர் என்ற போலீஸ்காரர் அப்பெண்ணை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த போலீஸ்காரரை சரமாரியாக அரைந்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அப்பெண் தன்னைப் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் பெண் நீதிபதி என்பது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அலகாபாத் ஐகோர்ட்டிடம் அனுமதி கேட்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்