மஹிந்தவை கூண்டில் ஏற்ற முடியும்: அமைச்சர் ராஜித

சில் துணி விநியோகத்திற்கு உத்தரவிட்டமை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் வழக்கு பதிவு செய்ய முடியும் என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ராஜித மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சில் துணி விவகாரத்தில் தானே உத்தரவிட்டேன் என்று கூறும் மஹிந்த மீது எவரேனும் வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் வேடர்ஸ் ஹோட்டல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது போன்று மஹிந்தவையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி நீதிமன்ற அவதூறு வழக்கையும் அவர் மீது பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்