சீனாவால் தவிக்கிறது இலங்கை அரசு

சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் தேசிய அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் முழுமையான வரிச்சலுகையை கோரியுள்ள நிலையில் அதனை வழங்குவதா இல்லையா என்ற விவகாரத்திலேயே மேற்படி குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

வரிச்சலுகையை வழங்கினால் அது அந்நிறுவனத்தை ஊக்குவிப்பதுடன் மேலதிக மூலதனத்திற்கு வழிவகுக்கும் என்று ஒருசாராரும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று மற்றொரு சாராரும் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

திறைசேரியிலுள்ள உயர்மட்ட பிரமுகர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவே அறியமுடிகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் கூட்டரசின் திட்டத்திற்கு ஏற்கனவே பலத்த எதிர்ப்புகள் ஏற்பட்டது. எனினும் அவற்றையும் மீறி துறைமுகம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரிச்சலுகை வழங்க வேண்டும் என்பது மற்றொரு குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்