அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி உத்தரவு.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 15 முதல் 19 ம் தேதி வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெறஉள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்படவேண்டும். ஒருவேளை அவர்கள் விரும்பினால், தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளைவைத்துக் கொள்ளலாம்.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரஉள்ளது. மாணவர்கள் உருது மொழியை விருப்ப பாடமாக தேர்வு செய்து கொள்ள முடியும்.

துவக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் உருவாக்கசாகித்ய அகாடமிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாட புத்தகங்களையும் தெலுங்கில்அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது எனகடுமையாக எச்சரித்துள்ளார்.

 

தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்கிற்கு பதிலாக சிறப்பு ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாகஎழுந்த புகாரை அடுத்து சந்திரசேகர ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்