வேன் மோதி ஒருவர் பலி சாரதி வேனுடன் தலைமறைவு பொலிஸார் வேன் சாரதியை கைது செய்ய வலை வீச்சு.

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு அருகாமையில் மஞ்சல் கோட்டினை கடந்து கொண்டிருந்தவர் மீது வேன் ஒன்று 13.09.2017 அன்று மாலை 6.30 மணியளவில் மோதி விட்டு சென்றுள்ளதாகவும், அவர் மரணமடைந்துள்ளதாகவும், சாரதி வேனுடன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் லிந்துலை கூம்மூட் பகுதியைச் சேர்ந்த சந்தன பிலிப் என இனங்காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் வேனின் பாகங்களும் மரணமடைந்தவரின் குடையும் கிடக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்