இந்த படம் பார்த்தால் பெண்களுக்கு இலவச சேலை.! எந்த படம் தெரியுமா.!

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார்.

நடிகர் சூர்யா இப்படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்த படத்தை திரைக்கு சென்று பார்க்கும் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை விளம்பரபடுத்தும் விதமாக படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒவ்வொரு காட்சியின் போது ஒரு பெண் தேர்வு செய்யபட்டு அவருக்கு நியூ பிராண்ட் சேலை இலவசமாக வழங்கபட உள்ளது.

இந்த விளம்பர நிகழ்ச்சி வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மட்டும் நடக்க உள்ளது.

பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பெண் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்