தமிழகத்தில் இருந்து ” நீட் ” தேர்வை விரட்டியடிக்கும் வரை – ஒவ்வொரு நாளும் கருப்பு நாளே!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு முழுக்க பரவலானதையடுத்து, ஐ டி ஊழியர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் பல்வேறு போராட்டங்களையும், முன்னெடுப்புகளையும் செய்து வருகின்றனர்.
கடந்த 6 செப்டம்பர், 2017 அன்று சோழிங்கநல்லூர் எல்காட் ஐ.டி பூங்கா முன்பு மாணவி அனிதாவிற்கு அஞ்சலில் செலுத்தும் ஒன்றுகூடல் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் தலைவர் வசுமதி தலைமையில், மன்றத்தின் பெண்கள் பிரிவு இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது.
எல்காட்டில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வு
பின்னர், 8 ஆம் தேதி, இராமபுரத்தில் உள்ள DLF ஐ.டி பூங்கா முன்பு ஒன்றுகூடல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மன்றத்தின் பொதுச் செயலாளர் வினோத், தலைவர் வசுமதி ஆகியோரை காவல்துறை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் தடுத்து வைத்ததால், அந்நிகழ்வு முடக்கப்பட்டது.
dlf
டிஎல்எப் முன்பாக FITE தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஊழியர்கள் துண்டறிக்கை பரப்புரை

 

dlf1

FITE தலைவர் வசுமதி அவர்களை தடுத்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயற்சி
இன்று 13 , செப்டம்பர் 2017 , தமிழகத்தில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தெருவிலிருந்து நிரந்தர விலக்கு கோரியும், ஐ .டி துறையினர் கருஞ்சட்டை அணிந்து அலுவலகங்களுக்கு செல்லும்படி, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம் அழைப்பு விடுத்திருந்தது. இதன் அடிப்படையில், பல்வேறு மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கருஞ்சட்டை அணிந்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கருஞ்சட்டை அணிந்து ஐ.டி ஊழியர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் எங்கும் பரவி இருப்பதை பார்க்க முடிகிறது.

BeFunky Collage

 

கருஞ்சட்டை அணிந்து புதன்கிழமையை கருப்பு தினமாக மாற்றிய ஐ.டி ஊழியர்கள் அனைவருக்கும் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
BeFunky Collage1
தமிழகத்தில் இருந்து ” நீட் ” தேர்வை விரட்டியடிக்கும் வரை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும்  வரை, தமிழ்நாட்டில் விடியும் ஒவ்வொரு நாளும் கருப்பு நாளே! நம்முடைய எதிர்கால தலைமுறையின் கல்வியை காக்கும் வரை நமக்கு விடியலில்லை.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்