தீபாவளிக்கு விஜய்யின் மெர்சலுடன் போட்டியிடும் படங்கள்….

கலைப்புலி எஸ். தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம், தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அதிரடி ஆக்ஷன் படமாக ஸ்கெட்ச் உருவாகி வரும் ஸ்கெட்ச் படம் தீபாவளிக்கு வரும் என்று முன்பு கூறப்பட்டது, இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறுகையில் ‘கண்டிப்பாக ஸ்கெட்ச் தீபாவளிக்கு இல்லை. இப்படத்தை நாங்கள் டிசம்பர் மாதம் வெளியிட தான் முடிவு செய்துள்ளோம், விரைவில் இசை வெளியீடு குறித்து தகவல் வரும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தீபாவளிக்கு மெர்சலுடன் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் வருவதாக மட்டுமே அறிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்