அனிதாவுக்கு இயக்குநர் ஷங்கர் செய்த மரியாதை!

ஒட்டு மொத்த தமிழர்களும் தன் தங்கை என்றும் அன்பு மகள் என்றும் அழைத்து மரியாதை செய்து கொண்டிருக்கிறது நீட் கொடுமையால் இன்னுயிரை இழந்த மாணவி அனிதாவை. அனிதா இறந்து பத்து நாட்களாகியும் கூட தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள் மாணவி அனிதாவின் உருவப்படத்தை கைகளில் தாங்கியபடி.

நீட் அடிப்படையில் நடந்த மாணவர் சேர்க்கையை ரத்து செய்யுமாறு பல கட்சிகள், அமைப்புகள் இன்னும் போராடிக் கொண்டுள்ளன. திரைப்பிரபலங்கள் அனைவருமே மாணவி அனிதாவுக்கு தங்கள் மரியாதையை அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வந்ததுமே, “அந்த மாணவி எந்த அளவுக்கு மனதால் கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைத்தாலே வேதனையாக இருக்கிறது,” என்றார். கமல் ஹாஸன், “அனிதாவும் என் அன்பு மகளே,” என்று உருகினார். விஜய் அனிதாவின் வீட்டுக்கே போய், அனிதாவின் தந்தையைச் சந்தித்து, என்ன விதமான உதவிகளையும் செய்யத் தயார் என்று கூறி, அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவி அனிதாவின் படத்தை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்