இரத்தினபுரி மாவட்டத்தில் 1,911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிப்பு

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை(6) முதல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை 1911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எஹலியகொடை, அயகம, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல ஆகிய ஏழு பிரதேச செயலகப்பிரிவுகளிளேயே இவ்வாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 1911 குடும்பங்களை சோந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 196 குடும்பங்களை சேர்ந்த 721 பேர் 18 பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 304 குடும்பங்களை சேர்ந்த 1420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 596 குடும்பங்களை சேர்ந்த 2,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 11 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 531 குடும்பங்களை சேர்ந்த 2119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன,; ஆறு பொது இடங்களில் 90 குடும்பங்களை சேர்ந்த 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அயகம பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 267 குடும்பங்களை சேர்ந்த 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பொது இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 199 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எலபாத்த பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 165 குடும்பங்களை சேர்ந்த 555 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பொது இடங்களில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிவித்திகள பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருவிட்ட பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 41 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில், இரத்தினபுரி, எஹலியகொடை, குருவிட்ட, அயகம, எலபாத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

சீரற்ற வானிலை தொடருமாயின் இரத்தினபுரி, பெல்மதுளை, களவான, கிரியெல்ல. நிவித்திகல, குருவிட்ட, எஹலியகொட, அயகம, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி நகரின் சில் இடங்களில் வெள்ள நீர் வடிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. இருப்பினும் இரத்தினபுரி பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக குறைவடையவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் அபுகஸ்த்தன்ன வேவல்கெட்டிய, களவான, நிவித்திகல உட்பட பல பிரதேசங்களில் வீதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் வீதிகள் சேதமடைந்து காணப்படுவதோடு வீதிகளில் போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது. அத்தோடு வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு இப்பகுதிகளில் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்