திரைப்படத்துறைக்கு பாரிய சேவைகளையாற்றிய இயக்குனர்களை கௌரவிக்கும் நிகழ்வு

நாட்டின் திரைப்படத்துறைக்கு பாரிய சேவையாற்றிய பிரபல திரைப்பட இயக்குனர் பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் உள்ளிட்ட விருது வென்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பெரேரா உட்பட சுகதாபால செனரத் யாபா,திஸ்ஸ லியனசூரிய,கீர்த்தி ஸ்ரீ பெரேரா உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வில் அரசாங்க திரைப்பட பிரிவினால் தயாரிக்கப்பட்ட விருது வென்ற ஆவணப்படங்களை டிஜிட்டல் முறைப்படுத்தி பாதுகாப்பதற்காக அவற்றை தேசிய காப்பகங்கள் திணைக்களத்திற்கு வழங்குதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட ஆவணப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்