வவுணதீவு பிரதேசத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரட்சி நிவாரணம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் 13ஆம் திகதி புதன்கிழமையன்று வழங்கிவைக்கப்பட்டது.
 
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால், வவுணதீவு பிரதேசத்தின் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 1713 குடும்பங்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகம் ஊடாக இந் நிவாரணங்கள் வழங்கப்பட்டது.
 
அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இதன்போது முதலாம் கட்ட நிவாரணமாக இம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
 
இந் நிகழ்வில், மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, நிருவாக உத்தியோகத்தர்(கி.உ) எம்.கோமளேஸ்வரன், அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சிவநிதி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் திருமதி எம்.விஜேந்திரா போன்றோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்