மட்டக்களப்பு மயிலங்கரச்சிக்கு காபட் வீதி, பலாச்சோலைக்கு கொங்கிறீற்று வீதி…

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை மயிலங்கரச்சி பிரதான வீதி மற்றும் வந்தாறுமூலை பலாச்சோலை வீதி என்பன புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா  13 இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பிரதம பொறியியலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர். கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பிரதேசத்தின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மயிலங்கரச்சி பிரதான வீதியானது பன்னெடுங்காலமாக மக்களின் போக்குவரத்திற்கு சாதகமற்ற நிலையில் காணப்பட்டது. இவ்வீதியின் குறைபாடுகள் புனரமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மயிலங்கரச்சி கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் அமைச்சரிடம் கோரப்பட்டதற்கிணங்க கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக 5.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்படி வீதி காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

அதே போன்று வந்தாறுமூலை பலாச்சோலை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பலாச்சோலை வீதி ரூபா 5.5 மில்லியன் ரூபா பெறுமதியில் கொங்கிறீற்று இடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Remove featured image

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்