ஆயுர்வேத மஸாஜ் நிலையத்தில் விபச்சாரம்… எங்கே தெரியுமா?..

கொழும்பு – கொள்ளுப்பிட்டிய பகுதியில் ஆயுர்வேத மஸாஜ் நிலையம் எனும் பெயரில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பில் 61 வயதுடைய குறித்த நிலையத்தின் முகாமையாளரும் அவருக்க உதவி புறிந்து வந்த 55 வயதுடைய பெண்ணும் மற்றும் 26,28,32,37 மற்றும் 49 வயதுடைய விபசாரத்தில் ஈடுபட்டு வந்த 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த பெண்கள் கந்தான, பண்டாரவல, பிலியந்தல, பன்னிபிட்டிய மற்றும் பானதுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் புதுக்கடை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்