கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் நேற்று (புதன்கிழமை)கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தவிடயம் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த பெண்ணை தாம் கைது செய்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைதானவரை நாளை (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்