மண்டியிட்ட அருந்திக்கவுக்கு மறுபடியும் பிரதி அமைச்சுப் பதவி?

மண்டியிட்ட அருந்திக்கவுக்கு மறுபடியும் பிரதி அமைச்சுப் பதவி?
கிறிஸ்தவ விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சுப் பதவிலிருந்து தூக்கப்பட்ட அருந்திக்க பெர்னாண்டோ எம்.பி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து  அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தேசிய அரசுக்குள் இருந்துகொண்டு மஹிந்தவுக்கு சார்பாக செயற்பட்டுவந்த அருந்திக்க பெர்னாண்டோ அரசின் செயற்பாடுகளையும், சுதந்திரக் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
கட்சியின் ஒழுக்க விழுமியங்களையும், அரசின் கூட்டுப்பொறுப்பையும் மீறும் வகையில் அவரின் செயற்பாடுகள் அமைந்ததால் பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே கடந்த புதன்கிழமை இரவு ஜனாதிபதியை சந்தித்து  தனது செயற்பாடுகள் குறித்து மன்னிப்புக் கோரியதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது தனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லையெனக் கூறியுள்ளார் என அறியமுடிகின்றது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள்மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அதற்கு எதிராக  ஜனாதிபதி உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனவும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, அருந்திக்கவுக்கு மன்னிப்பு வழங்கி, அவருக்கு மீண்டும் பிரதி அமைச்சுப் பதவி அல்லது அமைச்சுப்  பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அருந்திக்க பெர்னாண்டோ எம்.பி. புதன்கிழமை இரவு சந்தித்துப்  பேசியிருந்தார்.
……………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்