மறைந்த  கெளரவ.அன்ரனி ஜெயநாதனுக்கு சாமஸ்ரீ தேசமானிய விருது!

முல்லைத்தீவு – தண்ணீறூற்றில் சமஸ்ரீ சமூகசேவையாளர்கள் பாராட்டு விழா
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கல்வி, கலை, கலாச்சார, சமூகநல துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்திஜீவிகள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதில் மறைந்த வடக்கு மாகாண சபை பிரதி அவைத்தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சி முத்த உறுப்பினருமான கெளரவ. மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் அவர்களுக்கு சாமஸ்ரீ தேசமானிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் விருதினை அவருடைய மகனும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி செயலாளரும் சமூக சேவகருமாகிய பீட்டர் இளஞ்செழியனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதூர்தீன் மற்றும் சமூகசேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்