லலித்தை விடுவிக்க பிச்சைப்பாத்திரமேந்தி பிக்குகள் ஊர்வலம்!

லலித்தை விடுவிக்க பிச்சைப்பாத்திரமேந்தி பிக்குகள் ஊர்வலம்!
‘சில்’ துணி  விவகார வழக்கில்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின்  செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள அபராதத்  தொகையைச் செலுத்துவதற்காக நிதி திரட்டும் வகையில் மகாசங்க தேரர்கள் குழு, பிண்ட பாத்திரம் (பிச்சைப் பாத்திரம்) ஏந்தி ஊர்வலமாகச் செல்லும் நிகழ்வு நேற்றுக் கொழும்பில் ஆரம்பமானது.
கொழும்பு சம்புத்த ஜயந்தி சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே மேற்படி நிதி திரட்டும் திட்டம் நேற்று கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி விகாரையிலிருந்து ஆரம்பமானது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு நிதி திரட்டப்படுகின்றது.
மேதகொட அபேதிஸ்ஸ தேரர் தலைமையிலான குழவினரே இதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, சிசிர ஜயக்கொடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.
……..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்