லண்டன் மெட்ரோ ரயில் தீவிரவாதத் தாக்குதல்: போலீசார் விசாரணை

லண்டன் ரயிலில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, 18 வயது இளைஞரை கைது செய்து, அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு லண்டன் பகுதியில் சுரங்க ரயில் ஒன்றில் நேற்று பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில், 29 பேர் காயமடைந்துள்ள நிலையில், லண்டன் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் தோவர் துறைமுக பகுதியில் 18 வயது இளைஞரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல் நீடித்து வருவதால், லண்டனில் பாதுகாப்பு விலக்கி கொள்ளவில்லை என பிரிட்டன் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்