இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக்குழு தலைவர் நியமனம்

இலங்கையின் தொடர் தோல்விகள் காரணமாக இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு இந்திய தொடரின் பாதியில் இராஜினாமா செய்தது. இதன் பின்பு தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் கிரகாம் லெப்ரொய் நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால மற்றும் கிரகாம் லெப்ரொய் ஆகியோர் உறுதிசெய்துள்ளனர்.

எனினும் தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தெரிவுக்குழு தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் மோசமான தோல்விகளையடுத்து சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழு இராஜினாமா செய்திருந்தது.இந்நிலையில் புதிய தெரிவுக்குழு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள கிரிக்கெட் சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை புதிதாக தெரிவுசெய்யப்படும் தேர்வுக்குழு, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான அணிக்குழாமை அறிவிக்கும் என கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை புதிதாக தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ள கிரகாம் லெப்ரொய் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் என்பதுடன், இவர் இலங்கை அணிக்காக 27 டெஸ்ட் மற்றும் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்