அணு ஆயுத இலட்சிய பயணத்தை நோக்கி வட கொரியா!

வட கொரியா – நாட்டின் அணு ஆயுத இலட்சியங்களை நிறைவேற்றுவேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சபதம் இட்டுள்ளார்.

    வெகுதூரம் சென்று தாக்கக் கூடிய ஹுவாசாங் ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது வட கொரியா. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்று ஹொக்கைடோ தீவுக்கு அருகே கடலில் விழுந்துள்ளது.

    இதுவரை வடகொரியா ஏவியதிலேயே மிக நீண்ட தூரம் சென்றது இந்த ஏவுகணைதான் என்றும், பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவு இதன் தாக்குதல் எல்லைக்குள் வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த நிகழ்வை நேரில் பார்வையிட்ட கிம் ஜோங் – உன், அமெரிக்க ராணுவ துருப்புகளுக்கு இணையான ராணுவக் கட்டமைப்பை நிறுவுவதுதான் தமது இலக்கு என்று கூறியதாக கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்