மீண்டும் வருகிறார் மெலோடி கிங் வித்யாசாகர்

100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டவர் வித்யாசாகர். ரஜினியின் சந்திரமுகி, கமலின் அன்பேசிவம், அர்ஜூனின் கர்ணா, விஜய் நடிப் பில் நிலாவே வா, ஆதி, மதுர, குருவி, கில்லி உள்பட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். வடிவேலு நடித்த எலி படத்திற்கு இசையமைத்த வித்யாசாகர், அதையடுத்து பாபிசிம்ஹா நடித்துள்ள திருட் டுப்பயலே-2 படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும், எப்போதுமே மெலோடி இசையால் மனதை வருடக்கூடியவரான வித்யாசாகர், இந்த படத்திலும் தனது வழக்கமான பாணியில் பாடல களை கொடுத்திருப்பவர் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம். அவரது ஆர்வத்தைப்பார்த்த இயக்குனர் சுசிகணேசன் அவருக்கு முழுசுதந்திரம் கொடுத்து விட்டாராம். அதனால், பல காட்சிகளில் டயலாக்கே இல்லாமல் தனது பின்னணி இசையால் பேசியிருக்கிறாராம் வித்யாசாகர். அந்த வகையில், இந்த திருட்டுப்பயலே-2விற்கு பிறகு வித்யாசாகரின் ரீ-என்ட்ரி அமோகமாக இருக்கும் என்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்