நாங்க ரெடி , நீங்க ரெடியா என்று கேட்ட கிம் ஜொங் உன்: கடைசி ஏவுகணையும் வெற்றி

கடைசியாக நேற்று வடகொரியா ஏவிய ஏவுகணை பெரும் வெற்றியளித்துள்ளது. இதனை அடுத்து நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன் நாட்டு அதிபர் கிம் ஜொங் உன். நேற்றைய தினம் மீண்டும் ஒரு ஏவுகணையை வட கொரியா பரிசோதித்துப் பார்த்துள்ளது. அது ஜப்பானுக்கு மேலாக பறந்து சென்று பல மைல் தொலைவில் கடலில் விழுந்து வெடித்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க ராணுவத்திற்கு நிகரான பலம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ள அன் நாட்டு அதிபர். நாங்கள் ரெடி என்று ஒரு அறிவித்தலை விட்டு உலகை மீண்டும் உலுக்கியுள்ளார். இன் நிலையில் இக்கூற்று அமெரிக்காவை மேலும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால் ரம், இன்றைய தினம் அமெரிக்க வான் படைத் தளம் சென்று. ராடர் திரையில் சிக்காமல், அணு குண்டை ஏந்திச் சென்று தாக்கவல்ல ஸ்டெலத் விமானங்களை பார்வையிட்டு. விமானிகளோடு நின்று போட்டோ எடுத்துள்ளார். அவர் மீண்டும் வடகொரியாவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்