கொத்தாக சிக்கிய ஆண் – பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள்!! நடந்தது என்ன ?

டன்சானியாவின் ஸின்ஸிபார் சுயாட்சிப் பிராந்தியத்தில், ஓரினச் சேர்க்கையாளர்கள் இருபது பேரை பொலிஸார் கைது செய்தனர். அரசு சாரா நிறுவனம் ஒன்று நடத்திய பால்வினை நோய்கள் பற்றி விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று ஸின்ஸிபார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டவர்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருபது பேரும் அடங்குவர்.
அப்போது அங்கே வந்த பொலிஸார், ஓரினச் சேர்க்கையாளர்களான பன்னிரண்டு பெண்களையும் எட்டு ஆண்களையும் கைது செய்தனர். டன்சானிய சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு முப்பது வருட சிறைத் தண்டனை வழங்கவும் அந்நாட்டுச் சட்டத்தில் இடம் உள்ளது.
பால்வினைத் தொற்று நோய்கள் அதிகமாகப் பரவும் நாடுகளில் ஒன்றான டன்சானியாவில், மக்களுக்கு பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தனியார் சுகாதார நிறுவனங்கள் இயங்கி வந்தன. எனினும், அதுபோன்ற நிறுவனங்களே ஓரினச் சேர்க்கைக்கு மக்களைத் தூண்டுகின்றன என்ற சந்தேகத்தின் பேரில், பல்வேறு தனியார் சுகாதார நிறுவனங்களை கடந்த பெப்ரவரி மாதம் டன்சானிய அரசு தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்