தமிழக சுழல் மன்னனுக்கு பிறந்தநாள் இன்று…!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வரும் அஸ்வின் சென்னையில் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார்.

ஆரம்ப காலத்தில் ஓபனிங் பேட்ஸ்மெனாக இருந்த அஷ்வின், தற்போது முழுநேர சுழற்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறார். அவரது கிரிக்கெட் பயணத்தின் சில குறிப்புகள்:

*வேகமாக 50,100,150,200 மற்றும் 250 விக்கெட்களை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

*2016-ம் ஆண்டு ஐசிசி-யின் ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்ற விருதைப் பெற்றார். இதன் மூலம் சச்சின், டிராவிட்டிற்கு பிறகு இந்த விருதைப் பெறும் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதே ஆண்டில் ஐசிசி ‘சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்’ என்ற விருதையும் பெற்றார்.

*ஒரே போட்டியில் பேட்டிங்கில் 100 ரன்கள்அடித்து பந்து வீச்சில் 5 விக்கெட் வீழத்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் டெஸ்ட் போட்டியில் 4 முறை சதம் அடித்துள்ளார். அதில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது.

*தனது முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

*2016-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழித்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார. அவர் அந்த ஆண்டில் 72 விக்கெட்டுகளை வீழத்தினார்.

* 2014-ம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு ‘அர்ஜுனா விருது’ வழங்கி கௌரவித்தது.

*2012-13 ஆம் ஆண்டிற்கான ‘பிசிசிஐ’ யின் ‘பால்லி உம்ரிகார்’ (Polly Umrigar) விருதைப் பெற்றார்.

*தமிழக வீரர் அஷ்வின் இந்த ஆண்டு முதல் இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் வேர்சஸ்டர்ஷிர் அணிக்காக ஆடி வருகிறார்.

*பேட்ஸ்மேன்களை கலங்கவைக்கும் தனது ஸ்பெஷல் பந்து வீச்சான ‘கேரம் பால்’ இவரது சிறப்பாகும்.

தனது வருகைக்குப் பிறகு, அணியின் வெற்றிக்கு பெரும் பலமாக திகழும் அஷ்வின் வரும் ஆண்டுகளில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்