பெண் வேடம் அணிந்திருந்த ஒருவர் கைது

பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதான குறித்த இளைஞன் இராணுவ சிப்பாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்