உண்மையான காதல் எது என்பதை முதலிரவன்று தான் உணர்ந்தேன்! – உண்மை சம்பவம்

காதல் என்பது உடலுறவு சார்ந்த ஒரு விஷயம் அல்ல.. காதலில் பல படிநிலைகள் உள்ளன. காதலை பற்றி உண்மையில் அறிந்தவர்களுக்கு இது சாதாரண ஒரு விஷயமாக உள்ளது. ஒரு உண்மையான காதல் தான் உறவுகளை வளர்க்கும். சுதந்திரம் கொடுக்கும். பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும். இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி உடனிருப்பது தான் உண்மையான காதல். உண்மையான காதலை உணர்த்தும் ஒருவரது வாழ்க்கை அனுபவத்தை பற்றி இந்த பகுதியில் காண்போம்.

பள்ளி பருவ காதல் நான் எனது 16 வயதிலேயே காதலில் விழுந்தேன். நான் எனது பள்ளியில் மிகவும் பிரபலமானவள். நான் மிகவும் நன்றாக படிப்பேன். நான் அவரை இந்த சூழலில் தான் சந்தித்தேன். அவருக்கு கூச்ச சுபாவம் என்பது எப்போதுமே உண்டு. அந்த வெட்கப்படும் குணம் தான் என்னை ஈர்த்தது. ஆனால் எப்படியோ அவருக்கு என் மேல் உள்ள காதலை சொல்ல மட்டும் தைரியம் வந்துவிட்டது. இந்த முயற்சி தான் அவர் மேல் நான் காதலில் விழ காரணமாக இருந்தது.

சுதந்திரம் பறிபோனது நான் எல்லாவற்றையும் விட அவரை அதிகமாக நேசித்தேன். அவருக்காக நான் எதையும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் நான் என் சுதந்திரத்தை மட்டும் இழக்க ஆரம்பித்தேன். நான் 24×7 அவருடனே தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் கோபித்துக்கொள்வார். நான் எனது நண்பர்களிடம் பேசவே முடியாது.

கண்மூடித்தனமான காதல் ஏனென்றால் நான் அவருடன் இருக்கும் போது, நான் என் நண்பர்கள் குழுவிடம் பேசுக்கொண்டிருப்பது அவருக்கு அசௌகரியமாக இருக்கும். எங்களது பெற்றோர்கள் எங்களை என்ன இந்த வயதிலேயே காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள் என திட்டிக்கொண்டே இருப்பார்கள். நான் மட்டும் அவரை விட்டுக்கொடுக்கவே மாட்டேன். அதை தவிர நான் அவரை மிகவும் ஆழமாக காதலிக்கிறேன்.

இது முற்றிலும் தவறானது அவர் என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கெஞ்சினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன். எங்களது மத வழக்கப்படி திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது முற்றிலும் தவறான ஒன்று. எங்களது படிப்பும் முடிந்தது. நாங்கள் இருவரும் படிப்பிற்காக வெவ்வேறு நகரங்களில் வசித்து வந்தோம். ஒரு மாதம் கழித்து அவர் என்னை காண வந்திருந்தார்.

எல்லை மீறினார் அவரை கண்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவரிடம் சென்று ஹாய்! என்று கூறினேன். அவர் என்னிடம் கேட்ட முதல் வார்த்தை, நீ என்னுடன் உடலுறவு கொள்ள தயவு செய்து சம்மதம் சொல் என்பது தான். மிகவும் கொச்சையாக பேசினார். இது தான் அவருக்கு உண்டான எல்லை என்று கருதி, அவரது காதலை முறித்துக்கொண்டேன்.

திருமணம் அதன் பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து எனக்கு திருமணம் நிச்சயமானது. நான் அவரை காதலிக்கவில்லை. மனதிற்குள் ஏதோ ஒரு தர்ம சங்கடம். அவர் என்னை விட 8 வயது மூத்தவர். நாங்கள் திருமண நிச்சயத்திற்கு முன்னர் ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளோம். பின்னர் நாங்கள் போன் மூலமாக பேசிக்கொண்டோம். அப்போது தான் நான் அவரை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பித்தேன்.

எனக்கானவர் அவர் எனது வாழ்க்கையை நான் வாழ எனக்கென தனி இடம் கொடுத்தார். எனக்கு என் பெற்றோர்கள், நண்பர்கள் என யாருடனும் பேச நேரமில்லாதது போல தெரியவில்லை. நான் நானாக இருக்க அவர் அனுமதித்தார். திருமணத்திற்கு பிறகும் எனக்கு எதுவரை படிக்க தோன்றுகிறதோ அதுவரை படிக்கச் சொன்னார். அவர் முதலிரவு அன்றே என்னை அனுபவிக்க ஆசை கொள்ளவில்லை. நான் உடலுறவிற்கு எல்லாம் தயாராகும் வரை காத்திருந்தார்.

காதல் என்பது இது தான்! என் முதலிரவு அன்று தான் காதல் என்றால் உண்மையில் என்னவென்று புரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக சிரித்தோம், ஒன்றாக அழுதோம். சந்தோமோ, சோகமோ அவர் என் அனைத்திலும் பங்கு கொண்டார். அவரை நான் காதலிக்கிறேன் என்பதை தாண்டி, அதற்கும் மேலாக இருந்தார். எனது நெருக்கிய நண்பரும் அவர் தான்

மனநிறைவான வாழ்க்கை எங்களுக்கு திருமணமாகி இப்போது ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எங்களது காதல் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக காதலிக்கிறோம். அனைவருக்குமே பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனந்தம் தருமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை தந்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்