பிரபாகரன் குறித்தே என்னிடம் இராணுவம் தொடர்ந்து தொடர்ந்து விசாரணை செய்தது. தமிழ்செல்வனின் மனைவி ஜ.நா அரங்கில் சாட்சியம்.

வவுனியா ஜோசப் முகாமில் இருந்த போது மீண்டும் மீண்டும் இராணுவத்தினர் என்னிடம் தலைவர் பிரபாகரன் குறித்த விசாரணையை மேற்கொண்டிருந்தனர் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார்.

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் கடந்த 11 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கும் போது…,

16.05.2009 நான் இராணுவத்தினரிடம் பிடிபடுகிறேன் புதுக்குடியிருப்பில் வைத்து என்னை ஒரு இடத்தில் கொண்டு போய் விடுகிறார்கள். அந்த இடத்தில் நானும் எனது பிள்ளைகளும் பாப்பா அண்ணருடன் கூட இருந்த ரூபன் அண்ணரும் எங்களுடன் வந்தவர் அங்கு ஒரு வீட்டில் ஒரு ரூமுக்குள் 3 மணித்தியாலங்கள் வைத்திருக்கிறார்கள். தமிழ்செல்வனின் மனைவி என்று சொன்னால் இராணுவம் உங்களை கொன்னு விடும் என்றும் மாற்றுக் குழுக்களின் கண்ணில் பட்டுவிடாதீர்கள் என்று புதுக்குடியிருப்பு முகாம் கொமாண்டார் என்னிடம் சொல்லி அனுப்புகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்