இந்தியாவே ஒன்று கூடி எதிர்த்தாலும் முதன்மை அடுக்கு பாதுகாப்பு பணியில் இன்னமும் தமிழர்கள் தான்.

இந்தியாவே ஒன்று கூடி எதிர்த்தாலும் முதன்மை அடுக்கு பாதுகாப்பு பணியில் இன்னமும் தமிழர்கள் தான்: இந்தியமே வியக்கும் பின்னணி இரகசியம்..?

தமிழ்நாடு ஏன் பிற மாநிலங்களில் இருந்து வேறுபடுகிறது?

இந்தியாவின் முக்கிய சிறைச்சாலையான திஹாரில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது. இதில் மிக முக்கிய முதன்மை அடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுபவர்கள் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர்தான்.

உயர் பாதுகாப்பு பிரிவு செல்கள் தமிழ்நாடு சிறப்பு படையினர் பாதுகாப்பில்தான் உள்ளன. சிறைச்சாலையிலின் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் திபெத்தியன் சிறப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காரணம், தமிழர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள், நேர்மையாகவும், பணி ஈடுபாடும், சாய்ந்து கொடுக்காத தன்மையும் கொண்டவர்கள் என்பதால் தான்.

ஒரு காலத்தில் டெல்லியை கலக்கியது தமிழர்கள்தான். இன்று அங்கு நிலைமை வேறு .

தேசிய அளவிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது பஞ்சாபி, மாரத்தி, மலையாளி, மங்களூர் பிராமின் ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழர்களின் கடந்த கால சாதனைகள், வாழ்வியல் சூழல்கள், கடின உழைப்பு, நம்பிக்கை, உள்பட இன்னும் பல விடயங்களை மதிக்கிறார்கள்.போற்றுகிறார்கள்.

ஆனால் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசும் போது மிக மோசமான கழுவி ஊத்துராங்க.

குறிப்பாக 2007 க்குப் பிறகு மற்ற தேசிய இனத்தவர்கள் தமிழர்களை பார்க்கும் பார்வை வேறு வடிவில் இருக்கிறது.

ஆக அவர்கள் நம்மை ஆளும் மோசமான அரசியலை சூழலை வைத்தே முடிவு செய்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்