எரிவாயு தாங்கியில் வெடிப்பு: இருவர் படுகாயம்

பிரித்தானியா, நொட்டிங்காம் (ழேவவiபொயஅ) பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் எரிவாயுத் தாங்கியில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்டுள்ள வெடிப்பைத் தொடர்ந்து, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் அமைந்துள்ள எரிவாயுத் தாங்கி சேதமடைந்துள்ள போதிலும், தீ பரவில்லை என தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது, பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தாம் நம்பவில்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்