சாலையில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித கை – சாலைகள் முடக்கம்

பிரித்தானியாவில்  சாலை ஒன்றில்,  துண்டிக்கப்பட்ட, மனித கை ஒன்று  கிடந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிவேலாண்ட் (Cleveland) பகுதியில்உள்ள, முக்கிய சாலையிலே துண்டிக்கப்பட்ட கை இருந்துள்ளது.

சாலையில்  கிடந்த  துண்டிக்கப்பட்ட   மனித  கை  -  சாலைகள் முடக்கம்

தகவலறிந்து  சம்பவ  இடத்திற்கு விரைந்த பொலிசார், முக்கிய சாலையை மூடியுள்ளனர்.

பின்னர், கையை ஆய்வு செய்ததில்  அது போலியாக மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள துண்டிக்கப்பட்ட கை என கண்டறிந்துள்ளனர்.

பின்னர், சாலையை  திறந்துள்ளனர்.

இதனையடுத்து, போலியான துண்டிக்கப்பட்ட கையினை  புகைப்படம் எடுத்து, சம்பவத்தை விளக்கி,  பொலிசார்   தங்களின்அதிகாரப்பூர்வமான முகநூல்  பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை கண்ட பலர்  தங்களின் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்