பயங்கரவாத போராட்டத்தினால் பொலிஸ் படை பாதிப்பு

பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியானது, பிரித்தானிய பொலிஸ் படை மீது நிலையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாக நாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் படைக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலம் பொலிஸ் மீதான மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் ஆபத்தில் தள்ளியுள்ளது என்று தேசிய பொலிஸ் உயர் அதிகாரிகள் கவுன்சிலின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் படைக்கான வளங்கள் பொலிஸ் படையிலிருந்து திசைதிருப்பப்படுவதுடன், கட்டுப்பாட்டு அறைகளின் பதலளிப்பு முறைகளும் பின்வாங்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 5 பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்