கிரேட் காளி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்?

உலகளவில் பிரபலமான WWE எனும் மல்யுத்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்தவர் திலீப் சிங் ராணா எனும் கிரேட் காளி. தற்போது முழுமையாக அந்த போட்டியில் பங்கேற்காவிட்டாலும் அவ்வப்போது என்ட்ரி கொடுப்பார். இந்நிலையில் பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் நிலையில் கிரேட் காளியின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவரது வேடத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. அதேசமயம், காளியின் உயரத்திற்கும், உடல்வாகுவிற்கும் சுஷாந்த் சரிப்பட்டு வருவாரா என்று தெரியவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்