பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கல்லா கட்டும் ஓவியா

தமிழ் திரையுலகில் ‘களவாணி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா. அப்போதிருந்தே அவருக்கு தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் நடித்தது எல்லாம் சின்ன பட்ஜெட் மற்றும் இரண்டாம் நிலை ஹீரோக்கள் நடித்த படங்கள் தான்.

இந்தநிலையில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில்தான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓவியா.இதன் பிறகுதான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டதாலும்,அவரது வெளிப்படையான பேச்சாலும்,இயல்பாலும் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபமும், வரவேற்பும் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் ஒரு கூட்டமே உருவானது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, மக்கள் மத்தியில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அதை தனக்கு சாதகமாக மற்ற முடிவு செய்துவிட்டார்போல.

முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு கடை திறப்பு விழாவுக்கு 50 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டிருந்த ஓவியா, தற்போது பிரபலமான ஒரு கடையைத் திறந்து வைக்க, லட்சக் கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார்.

சரி,கடை திறப்பு விழாவுக்கே இப்படி கேட்டால்,படத்தில் நடிக்க எவ்வளவு கேட்பார்? நிறைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓவியாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுபோல், இதைப்பயன்படுத்தி ஓவியாவும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கேட்கிறாராம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்